/indian-express-tamil/media/media_files/2024/11/04/B1WCUTCe7oQUaCg5RbsI.jpg)
கோவையில் நடைபெற்ற ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்திற்கான வீரர்கள் மற்றும் கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம், கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பலர் வருகை தந்துள்ளனர். இதில், 174 ராணுவ வீரர்கள் மற்றும் 50 கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இன்று காலை 5 மணிக்கு பிஆர்எஸ் வளாகத்தில் தொடங்கிய இந்த முகாமில், தெலங்கானா, குஜராத், கோவை, புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
5-ஆம் தேதி, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களும், 6-ஆம் தேதி ராஜஸ்தான், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர்.
7-ஆம் தேதி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
8-ம் தேதி சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகரைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
9-ஆம் தேதி ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம் பகுதிகளை சேர்ந்தவர்களும், 10-ஆம் தேதி கோழிக்கோடு, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு, பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் வயநாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவர்களுக்கு முதற்கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். அது முடிந்த பின்பு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின்பு, 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்நிலையில், முகாமில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால், தேர்வுக்கு வருகை தந்திருந்தவர்கள் பலர் சாலையோரம் படுத்து உறங்கினர். இதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
பி.ரஹ்மான்.
கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.