Tenkasi Old Courtallam | Old Courtallam Waterfall | தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி அருவி, செண்பகா தேவி அருவி ஆகியவை மிகவும் புகழ்பெற்ற இயற்கை அதிசயங்களில் சில. இந்த அழகிய நீர்வீழ்ச்சிகள் பொதுவாக ஆண்டு முழுவதும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் அதே வேளையில், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பருவகால கட்டுப்பாடுகள் உள்ளன.
குறிப்பாக மழைக்கால மாதங்களில் இந்தக் கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். மேலும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இந்தநிலையில் தற்போது பயணிகளை வரவேற்கும் விதமாக இரவு நேரங்களில் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.
பாரம்பரியமாக, இந்த நீர்வீழ்ச்சியானது பகல்நேர பார்வையாளர்களை கணிசமான எண்ணிக்கையில் ஈர்க்கிறது, இப்போது, சுற்றுலாப் பயணிகள் இரவிலும் குளித்து புத்துணர்ச்சி பெறலாம். மழைக்காலங்களில், இந்த அருவிகள் அடிக்கடி நிரம்பி வழிவதால், அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்துவிடுகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
டந்த காலங்களில், பழைய குற்றாலம் அருவிகள் மாலை 6 மணிக்கு மூடப்பட்டதால் அதைச் சுற்றியுள்ள பட்டாபதி, அயிரப்பேரி, மத்தளம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இரவு நேரத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அயிரப்பேரி, பட்டப்பதி, மத்தளம்பாறை ஆகிய ஊராட்சிகளில் வசிப்பவர்களின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பழைய குற்றாலம் அருவியில் இரவில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கக் கோரி கடந்த ஆண்டு ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“