Advertisment

பீடி, சிகரெட் வரியை உயர்த்த வேண்டும் : ராமதாஸ்

தங்கத்தின் மீது 10 விழுக்காடு சுங்கவரியும், ஒரு விழுக்காடு உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMK, Ramadoss, Minister, Income tax department, Tasmac,

பீடி, சிகரெட்டுக்கு நூறு சதவிகிதம் வரிவிதிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லியில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு கூட்டத்தில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் அதிக அளவில் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. மக்களை பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிலும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பொருட்கள் மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான பொருட்களுக்கான வரி விகிதங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், தங்கம், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி விகிதங்களை தீர்மானிப்பதற்காக ஜூன் 3ம் தேதி தில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தங்கத்திற்கு இப்போது ஒரே ஒரு விழுக்காடு மட்டும் தான் மதிப்புக்கூட்டு வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அது பொருட்கள் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 3 விழுக்காடாக உயர்த்தப் பட்டுள்ளது. தங்கம் மீதான வரி விதிப்பு என்பது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. தங்கத்தின் மீது 10 விழுக்காடு சுங்கவரியும், ஒரு விழுக்காடு உற்பத்தி வரியும் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தங்கத்தின் மீதான சேதாரம், செய்கூலி ஆகியவற்றை உள்ளடக்கிய மதிப்புக் கூட்டு சேவைக் கட்டணம் மீது 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தங்கத்தின் மீது 15.67 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகமான வரி விதிப்பாகும்.

தங்கத்தின் மீது இப்போது சுங்கவரி, மதிப்புக் கூட்டு வரி, கலால்வரி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து 12.43% மட்டுமே வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி விதிப்பு முறையில், இப்போது இருப்பதைவிட 3.24 விழுக்காடு அதிகமாக வரி வசூலிக்கப்படும். மேலோட்டமாகப் பார்க்கும் போது 3.24% வரி உயர்வு என்பது சாதாரணமான ஒன்றாகத் தெரியும். ஆனால், தங்கத்தின் மதிப்பின் மீது கணக்கிட்டுப் பார்த்தால் தான் அதன் உண்மையானத் தாக்கம் தெரியவரும். உதாரணமாக ஒரு பவுன் தங்கத்தின் விலை செய்கூலி மற்றும் சேதாரம் சேர்த்து ரூ.25 ஆயிரம் என்று வைத்துக் கொண்டால், இதுவரை செலுத்தியதைவிட இப்போது கூடுதலாக ரூ.810 வரி செலுத்த வேண்டியிருக்கும். ஒரு பவுன் தங்கத்திற்கு மொத்தமாக ரூ. 2985 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது எந்த வகையில் பார்த்தாலும் நியாமற்றது.

அளவுக்கதிகமாக வரி விதிக்கப்படும் போது, அதைத் தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரப்படும். அது இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும். எனவே, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, கலால் வரி ஆகியவற்றை முற்றிலுமாக ரத்து செய்வதுடன், பொருட்கள் மற்றும் சேவை வரியையும் ஒரு விழுக்காடாக குறைக்க வேண்டும்.

ஏழை மக்களின் உணவுப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் பிஸ்கட்டுகளுக்கு 18% பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதும், ரூ.500-க்கும் அதிக விலை கொண்ட காலணிகளுக்கு 18% வரி விதிக்கப்பட்டிருப்பதும் ஏழைகளை கடுமையாக பாதிக்கும். அதேநேரத்தில் உடல்நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் பீடிக்கு 28% மட்டுமே வரி விதிக்கப்பட்டிருக்கிறது. பீடி, சிகரெட் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அவற்றுக்கு 100% வரி விதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Dr Ramadoss Gst
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment