/tamil-ie/media/media_files/uploads/2022/08/tamil-indian-express-2022-08-02T161424.217.jpg)
Bears Threatens people in Coonoor Nilgiris district Tamil News
Bears Threatens people in Coonoor Nilgiris district Tamil News
ரகுமான், கோவை
coonoor news tamil: குன்னூர் அருகேயுள்ள அளக்கரை கிராம பகுதியில் கடந்த 8 மாதங்களாக இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்து வலம் வந்த தாய்கரடி உட்பட மூன்று கரடிகள் தற்போது குட்டிகள் பெரிதாக வளர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் - கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் அருகேவுள்ள அளக்கரை கிராம பகுதியில், கடந்த 8 மாதங்களாக அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்து கொண்டு ஒரு கரடி உணவை தேடி கிராமப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள், சாலைகளில் வலம் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், தற்போது இரண்டு குட்டி கரடிகள் பெரிய கரடிகளாக வளர்ந்ததை தொடர்ந்து மூன்று கரடிகளாக மீண்டும் அப்பகுதியில் வலம் வருகின்றன. இதனால், தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் கரடிகள் தங்களை தாக்கி விடுமோ என்கிற அச்சத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே முடங்கி கிடக்கின்றனர்.
இதனையடுத்து, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்தக் கரடிகளை வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
#WATCH || நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அளக்கரை கிராம பகுதியில் கரடிகள் அச்சம்; கூண்டு வைத்துப்பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை! https://t.co/gkgoZMIuaK | #nilgiri | #Bears pic.twitter.com/y2yynbGEfi
— Indian Express Tamil (@IeTamil) August 2, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.