மாவட்ட ஆட்சியர் வளாக உணவகத்தில் பீப் பிரியாணி; தேசிய எஸ்சி ஆணையம் உத்தரவு - Beef Biryani added in the Menu of hotels at campus of Thiruvallur Collector office | Indian Express Tamil

மாவட்ட ஆட்சியர் வளாக உணவகத்தில் பீப் பிரியாணி; தேசிய எஸ்சி ஆணையம் உத்தரவு

தேசிய பட்டியல் இன ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழ் நாட்டில் முதல் முறையாக, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி உணவை சேர்க்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வளாக உணவகத்தில் பீப் பிரியாணி; தேசிய எஸ்சி ஆணையம் உத்தரவு

தேசிய பட்டியல் இன ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழ் நாட்டில் முதல் முறையாக, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் பீப் பிரியாணி உணவை சேர்க்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் மூன்று உணவகங்களை மகளிர் சுயஉதவிக்குழுவினர் நடத்திவருகின்றனர். இந்த உணவகங்களில் மாட்டிறைச்சி உணவை சேர்க்க கோரி செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த ஊழியரும் சமூக ஆர்வலருமான மோகன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

தனது கோரிக்கையை ஏற்க மாவட்ட ஆட்சியர் மறுத்ததை அடுத்து, மோகன் தேசிய பட்டியல் இன ஆணையத்தில் முறையிட்டார்.

இந்நிலையில் மகளிர் சுயஉதவி குழுவினர் நடத்தும் உணவகத்தில் மாட்டிறைச்சி உணவு சேர்க்க வேண்டும் என்று தேசிய எஸ்சி ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மூன்று உணவகங்களிலும் பீப் பிரியாணி சேர்க்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆணையிட்டுள்ளார்.

மேலும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகங்களில் இது தொடர்பான விலை பட்டியலும் ஒட்டப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் உணவகங்களில் மக்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று.மாட்டிறைச்சி உணவை வழங்க வேண்டியது கடமை என்றும் அதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Beef biryani added in the menu of hotels at campus of thiruvallur collector office