தனித்துவமான கட்டிடக்கலை கொண்ட ஒரு கம்பீரமான கோட்டை, மற்றும் 6 கி.மீ நீளமுள்ள பெக்கல் கடற்கரை என சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் இடங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கபோகின்றோம்.
பெக்கல் (Bekal) என்பது கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரை கிராமத்தில் அமைந்திருக்கின்ற ஒரு கடலோரப் பகுதி ஆகும்.
இது கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 550 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 380 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
இந்த கடற்கரையிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.
பெக்கால் கோட்டை
பெக்கால் கோட்டை கேரள மாநிலத்தில் உள்ளது. இதுதான் கேரளத்திலேயே மிகப்பெரிய கோட்டையாகும். இது 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. படிகளைக் கொண்டு உயரமாக அமைக்கப்பட்ட நீர்த்தொட்டியும் உயர்ந்த இடத்தில் அகன்ற படிகளைக் கொண்ட கண்காணிப்புக் கோபுரமும் இக்கோட்டையின் சிறப்பம்சங்களாகும்.
இது அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது.
இது இந்தியாவில் உள்ள மற்ற கோட்டைகளைப் போல் அரசின் மையக் கட்டிடமாக இல்லாமல் தனியே பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
பெக்கால் கோட்டை ஒரு நிர்வாக மையம் அல்ல, அதில் எந்த அரண்மனையோ அல்லது மாளிகையோ இல்லை.
ஒரு முக்கியமான அம்சம் நீர்-தொட்டி, பத்திரிகை மற்றும் திப்பு சுல்தான் கட்டிய ஒரு கண்காணிப்பு கோபுரத்திற்கு வழிவகுக்கும் படிகள் உள்ளது.
இந்தியா 1992 இல் பெக்கால் கோட்டையை ஒரு சிறப்பு சுற்றுலாப் பகுதியாக அறிவித்தது.
இந்த கோட்டை திரைப்பட இயக்குனர்களின் விருப்பமான ஓர் இடம். பல்வேறு இந்திய திரைப்படங்களை, குறிப்பாக அவர்களின் பாடல்களை செழித்து வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்தக்கோட்டை.
மேலும் பம்பாய் திரைப்படத்தின் 'உயிரே' பாடல் பெக்கால் கோட்டையில் படமாக்கப்பட்டது.