/indian-express-tamil/media/media_files/7WymyM55gfddJ5SrfEhm.jpg)
Representational picture: Arignar Anna Zoological Park
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிகப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி உயிரிழந்தது பார்வையாளர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில், மான், சிங்கம், புலி, சிறுத்தை, யானை, நீர் யானை, ஒட்டகச் சிவிங்கி, பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள் பரமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் வந்து வனவிலங்குகளைப் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் புலி வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வந்த விஜயன் என்ற 21 வயது ஆண் வங்கப் புலி வயது மூப்பு காரணமாகவும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தது என்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.