Advertisment

‘அம்மா’ உரிமை கோரி பெங்களூரு அம்ருதா வழக்கு : கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jeyalalitha, bengaluru amrudha, aiadmk, supreme court of india, karnataka high court

ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிடப்பட்டது.

Advertisment

ஜெயலலிதாவின் வாரிசுப் பிரச்னை ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்காக இருக்கிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமையாக்க எடப்பாடி பழனிசாமி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகனும், தீபாவின் சகோதரருமான ஜெ.தீபக்கும், ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் ‘நானும் தீபாவும்தான்’ என கூறி வருகிறார். இந்தச் சூழலில் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

38 வயதான அம்ருதா தனது மனுவில், ‘ஜெயலலிதா எனது சொந்த தாய்’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் அதில், ‘ஜெயலலிதாவின் மகள் என என்னை அறிவிக்க வேண்டும். அவர் என் தாய் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என் வளர்ப்பு தாய் சைலஜா 2015-ல் இறந்துவிட்டார். வளர்ப்பு தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20-ம்தேதி இறந்துவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, ஜெயலலிதா என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும்’ என்றும் அம்ருதா தனது மனுவில் கூறியுள்ளார்.

அம்ருதாவின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு ஆய்வு செய்ததுய். அதைத் தொடர்ந்து இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

 

Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment