New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/08/v.k.sasikala.jpg)
FERA violation case against Sasikala
வருகின்ற 13 மற்றும் 14-ம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
FERA violation case against Sasikala
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம், வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். இதுதொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க திட்டமிட்டனர். ஆனால், அவர் மவுன விரதம் இருந்ததால் விசாரிக்க முடியாமல் போனது.
இதை தொடர்ந்து, அண்மையில், பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திற்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியது.
இதற்கு, தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், வருகின்ற 13 மற்றும் 14-ம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கிடையில், ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையமும் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக உள்துறைக்கும், பெங்களூர் சிறைத்துறை அதிகாரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.