'எதிர்க்கட்சி கூட்டம் நடக்கும் போதெல்லாம் தி.மு.க-வை குறிவைத்து இ.டி சோதனை': பெங்களூருவில் ஸ்டாலின் குற்றச்சாட்டு
பெங்களூருவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி கூட்டம் நடக்கும் போதெல்லாம் தி.மு.க-வை குறிவைத்து இ.டி சோதனை நடத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.
பெங்களூருவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி கூட்டம் நடக்கும் போதெல்லாம் தி.மு.க-வை குறிவைத்து இ.டி சோதனை நடத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.
'ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி அவசியம்' என பெங்களூருவில் நடந்த எதிர்கட்சிகள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
Opposition parties' meeting in Bengaluru - CM MK Stalin Tamil News: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. அவ்வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி முதன்முறையாக நடைபெற்றது. இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
Advertisment
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், தி.மு.க., ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் நேற்றும், இன்றும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் 2 நாட்களாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம் இன்று நிறைவு பெற்றது. இன்று எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 3-வது எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையிலும், 4-வது கூட்டம் தமிழ்நாட்டிலும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ஸ்டாலின் குற்றச்சாட்டு
Advertisment
Advertisements
இந்த நிலையில், இந்த கோட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கு முன்பும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்றபோது தி.மு.க-வை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. பெங்களூருவில் 2-வது கூட்டம் நடைபெறும்போதும் தி.மு.க-வை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கும்போதெல்லாம் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது என்று முதல்வர் ஸ்டலின் குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், எதிர்க்கட்சிகளிடையே பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் அவசியம் என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதும் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil