Advertisment

சர்ச்சை பேச்சு- மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

ஷோபா கரந்த்லாஜே பேச்சுக்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அதற்காக மன்னிப்பு கோரியதோடு தனது கருத்துகளை திரும்பப்பெறுவதாக ஷோபா கூறியிருந்தார்.

author-image
WebDesk
New Update
Shobha Karandlaje

Shobha Karandlaje

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது மதுரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பெங்களூருவில் நேற்று (மார்ச் 19) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், தமிழகத்தில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றதுஎன்று பேசியிருந்தார்.

அவரது கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேசிய வீடியோ கிளிப்பை தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஸ்டாலின் அதில்,“பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசுவதற்கு அவர் ஒன்று, என்ஐஏ அதிகாரியாக இருக்கவேண்டும். அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இப்படி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழர்களோடு கன்னடர்களும் பாஜகவின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள்.

நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பாஜகவில் இருக்கும் அனைவரும் இத்தகைய கேவலமான, பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து அவர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டு இருந்தார்.

ஷோபா கரந்த்லாஜே  பேச்சுக்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அதற்காக மன்னிப்பு கோரியதோடு தனது கருத்துகளை திரும்பப்பெறுவதாக ஷோபா கூறியிருந்தார்.

இதனிடையே, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், இதனிடையே மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தியாகராஜன் என்பவர் அமைச்சர் ஷோபா மீது புகார் தெரிவித்துள்ளார்.

அதில், மார்ச் 19 ஆம் தேதி அன்று செய்தி சேனல்களை பார்த்த போது கர்நாடகா மாநிலம் மத்திய பெங்களூரு நகரத்தப்பேட்டையில்,  மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே செய்தியாளர்களிடம் பேசும் போது தமிக மக்களை குற்றம் சாட்டும் அறிக்கையை வெளியிட்டார்.

மார்ச் 01, 2024 அன்று பெங்களூரில் நடந்த ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகின்றது. இருந்தபோதிலும் அமைச்சர் வெடிகுண்டு தமிழகத்தை சேர்ந்தவர்களால் வைக்கப்பட்டது. என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனுவின் அடிப்படையில் காவல்துறை சார்பில் ஐபிசி 123, 153A, 5051B, 5052 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment