Advertisment

பெங்களூரு கஃபே குண்டு வெடிப்புக்கு தமிழர்கள் காரணமா? மத்திய அமைச்சர் பேச்சுக்கு ஸ்டாலின், இ.பி.எஸ். கண்டனம்

பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் நிராகரிப்பார்கள்.

author-image
WebDesk
New Update
Stalin EPS

Bengaluru Rameshwaram cafe blast

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என்று பாஜகவின் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறிய கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

கர்நாடகாவைச் சேர்ந்த அமைச்சர் மீது வெறுப்புப் பேச்சுக்காக இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"தமிழகத்தில் இருந்து வருபவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைத்துள்ளனர்... ஓட்டலில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள்" என்று அமைச்சர் கூறிய வீடியோ கிளிப்பைப் பகிர்ந்த ஸ்டாலின், இது ஒரு பொறுப்பற்ற அறிக்கை என்று கூறினார்.

அத்தகைய கூற்றுக்களை கூறுவதற்கு ஒருவர் NIA அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும். வெளிப்படையாக, இப்படி பேசுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை.

பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் நிராகரிப்பார்கள்.

அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதற்காக அமைச்சர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் முதல் தொண்டர்கள் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், என்றார்.

தமிழக மக்களை தீவிரவாதிகளாகப் பொதுமைப்படுத்தும் நோக்கில் அமைச்சரின் வெறுப்புப் பேச்சுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார். பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த பேச்சை "விஷம்" என்று குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது, ​​பாஜக அமைச்சர் எப்படி இப்படி ஒரு மூர்க்கத்தனமான கூற்றுக்கு வந்தார் என்று ஆச்சரியப்பட்டார்.

பாஜகவின் வருந்தத்தக்க பிளவுபடுத்தும் அரசியல் புதிய தாழ்வைத் தொட்டுள்ளது. பாஜகவின் கேவலமான கூற்றுக்களை தமிழர்களும், நமது கன்னட சகோதர, சகோதரிகளும் நிராகரிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்ற உதயநிதி தேர்தல் ஆணையத்தை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கரந்த்லாஜே தனது சர்ச்சைக்குரிய கருத்தை வாபஸ் பெற்றதோடு, தனது கருத்துக்களால் புண்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment