Advertisment

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நகை பறிமுதல்: தமிழக அரசிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடமே ஒப்படைக்க வேண்டுமென சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Bengaluru special court order to handover Jayalalithas seized valuables TN GOVT Tamil News

ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Jeyalalitha: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. 

Advertisment

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் நீதிமன்ற காவலில், பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதற்கிடையில், 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார். அவர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் அங்கேயே இருந்தன.

வழக்கு

இதனையடுத்து, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டுமென சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறி மனுதாக்கல் செய்திருந்தார்.

தீர்ப்பு 

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்கள் தொடர்பான வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹெ.ஏ.மோகன், “நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழ்நாட்டுக்கு மாற்றுவது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆகவே, தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக போலீசாருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள வருமாறு உத்தரவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jeyalalitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment