சென்னையில் இருந்து பொங்களூரு செல்வதற்கான விமான பயண டிக்கெட்டின் விலை ரூ. 2000 ஆக குறைந்துள்ளது.
கொரோனா காலத்தில், விமானத்தில் பயணம் செய்வதை அனைவரும் தவிர்த்தனர். இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த இந்த காலத்தில் அதிகமனோர் விமானம் மூலம் பயணிக்கின்றனர். இந்நிலையில் விமான டிக்கெட் விலை கொரோனாவிற்கு முன்பு இருந்ததுபோல் இல்லாமல், இப்போது குறைந்துள்ளது.
வந்தேபாரத் ரயில் அறிமுகத்தால், விமானத்தில் செல்வோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதில் பயணித்தால் சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல 4.25 மணி நேரம் மட்டுமே தேவைப்படும்.
திங்கள்கிழமை அன்று சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் விமான டிக்கெட் விலை, ரூ.900 ஆக இருந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த நாட்களில் ரூ.1,700 முதல் ரூ.2000 வரை உள்ளது.
இந்நிலையில் இந்த திடீர் விலை குறைவுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. குறைந்த விலையில் பயணிக்கும் ஆகாசா ஏர் விமானங்களின் அதிக பயணிகளை உள்ளடக்கி கொள்கிறது. ஐ.டி துறையில் தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது காரணமாக இருக்கலாம். மேலும் சென்னையிலிருந்து பெங்களூரு செல்ல மக்கள், ரயில் அல்லது சொந்த வாகனத்தில் செல்வதை தேர்வு செய்கின்றனர். விமான பயணத்தைவிட அவர்களுக்கு இது வசதியாக இருக்கிறது.
மேலும் வதே பாரத் ரயில் மூலம் பயணத்தால் ரூ,1000 மட்டுமே செலவாகிறது. இதுவும் விமான டிக்கெட் விலை குறைவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.