சிறந்த நகரங்கள் பட்டியல் ஒரு பார்வை : இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் . சமூக வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள், பொருளாதாரம், மற்றும் ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியலை தயார் செய்திருக்கிறது மத்திய அமைச்சகம்.
சிறந்த நகரங்கள் பட்டியல் - முதல் பத்து இடங்களைப் பிடித்த நகரங்கள்
மகாராஷ்ட்ராவில் இருக்கும் புனே, நவி மும்பை, மற்றும் கிரேட்டர் மும்பை ஆகிய மூன்று நகரங்களும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டன. இந்த பட்டியலில் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும் சில நகரங்கள்
திருப்பதி (ஆந்திர பிரதேசம்)
சண்டிகர் (மகாராஷ்ட்ரா)
தானே (மகாராஷ்ட்ரா)
ராய்ப்பூர் (சட்டிஸ்கர்)
இந்தூர் (மத்திய பிரதேசம்)
விஜயவாடா (ஆந்திரப்பிரதேசம்)
போபால் (மத்திய பிரதேசம்)
தமிழகத்தில் இருந்து இரண்டு நகரங்கள் இந்த சிறந்த நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. திருச்சி 12 வது இடத்தினையும் சென்னை 14வது இடத்தினையும் பெற்றுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி 33வது இடத்தினையும், குஜராத்தின் அகமதாபாத் 23வது இடத்தினையும், ஐதராபாத் 27வது இடத்தினையும் பெற்றுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லி 65 வது இடத்தினையும் பெற்றுள்ளது. பெங்களூரு நகரத்திற்கு 58வது இடம் கிடைத்திருக்கிறது.