உலக புகழ்பெற்ற திருக்கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழா மே 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரி ரட்சகர்தெரு கைலியார் குடும்பத்தை சேர்ந்த கெனி என்பவர் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இந்தக் கொடிக்கயிறு திருக்கோவில் தலைவாசலில் ஆகம முறைப்படி மீனவர் ஜெனியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மே 24ஆம் தேதி திருக்கொடியேற்றம் நடந்தது.
மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரரூ கொடியேற்றி வைத்தார். இந்த திருவிழா அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
திருவிழா காலங்களில் அம்மனுக்கு சிறபபு பூஜைகள், தீபாதாரனை நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“