காங்கிரஸ் கட்சியின் 'பாரத் ஜோடோ யாத்ரா' விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக தொழிலாளர்கள், தமிழ் பெண்னை ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வைக்க முன்வந்த சுவாரஸ்யமான சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
Advertisment
காங்கிரஸ் எம்பி, ராகுல் காந்தி சனிக்கிழமை மதியம் கன்னியாகுமரியில் உள்ள மார்த்தாண்டத்தில், பெண் மகாத்மா காந்தி தேசிய ஊரக தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஒரு பெண், ராகுல் காந்தி தமிழ்நாட்டை நேசிக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், அவருக்கு ஒரு தமிழ்ப் பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார், இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
'பாரத் ஜோடோ யாத்ரா' 3வது நாளிலில் ஒரு மகிழ்ச்சியான தருணம்
ராகுல் காந்தி இன்று மதியம் மார்த்தாண்டத்தில் பெண் தொழிலாளர்களுடன் உரையாடியபோது, அவருக்குத் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் ஒரு பெண் கூறினார்!
ராகுல் காந்தி மிகவும் பூரிப்புடன் இருக்கிறார். இந்த புகைப்படம் அதைக் காட்டுகிறது! என ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.
பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான 3000 கிலோமீட்டர் பயணத்தை 5 மாதங்களுக்கு மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து வியாழக்கிழமை காலை, யாத்திரை தொடங்கியது.
4 நாட்கள் தமிழ்நாட்டில் யாத்திரை முடித்த பிறகு, கேரளாவில் அதன் 19 நாள் யாத்திரை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் இந்த அணிவகுப்பு குறித்த செய்திகள் சில இடங்களில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“