காமராஜர் பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை... கள்ளிக்குடியில் ரூ.25 கோடி மதிப்பில் மணிமண்டபம்!

டெல்லி காமராஜ் மார்க்கில் உள்ள காமராஜர் சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை.

Bharat Ratna K Kamarajar 117th Birth anniversary : கர்மவீரர், கல்விக்கண் திறந்த மகான், கருப்பு காந்தி என்று பலராலும் மரியாதையுடன் அழைக்கப்படும் காமராஜர் அவர்களின் 117 ஆவது பிறந்த தினம் இன்று. மதுரை அருகே உள்ள விருதுப்பட்டி என்ற ஊரில்  குமாரசாமி சிவகாசி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார் இவர்.

தன்னுடைய ஆறாவது வயதில் தன் தந்தையை இழந்தார் தன் மாமன் வைத்திருக்கும் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  14வது வயதில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திரத்திற்கான பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். 1930 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன் முறையாக சிறைக்கும் சென்றார்.  தன் வாழ்நாளில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 6 முறை சிறை சென்றவர் 9 ஆண்டுகள் வரை சிறைவாசம் பெற்றார்.

மணி மண்டபம்

விருதுநகர் நுழைவாயிலில் கட்டப்பட்டுள்ள காமராஜருக்கான மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்தார். காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலர் சரத்குமாரால் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று காலை 09:15 மணிக்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர். இந்நிகழ்வில் முதல்வருடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ராதிகா சரத்குமார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் மற்றும் தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ  ஆகியோர் உடன் இருந்தனர். மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கள்ளிக்குடியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.  காமராஜர் மணிமண்டபம் ரூ.25 கோடி செலவில் 12ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

Bharat Ratna K Kamarajar 117th Birth anniversary :  தலைவர்கள் மரியாதை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

இந்திய நலனுக்காக 6 முறை சிறை சென்றவர் இந்திய விடுதலைக்காக ஏறக்குறைய 3000 நாட்கள் சிறையில் இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காமராஜர் குறித்து ட்வீட் செய்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பாரத் ரத்னா காமராஜர் அவர்களை அவருடைய பிறந்த தினத்தில் நினைவு கூறுகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் காமராஜ் மார்க்கில் உள்ள காமராஜர் சிலைக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விருதுநகர் எம்.பி. ட்வீட்

புகழ் என்றும் வாழ்க ! கல்வி தந்து தமிழ்நாட்டை காத்த தலைவர் ! நேருவின் இதயம் பிறந்த நாள் இன்று என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ட்வீட் செய்துள்ளார்.

காமராஜருக்கு மரியாதை செலுத்தும் அமைச்சர்கள்

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சி. ஆர். கேசவன்

எளிமைக்கும் உண்மைக்கும் பேர் போன தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

 

புதுவை முதல்வர் நாராயணாசாமி மரியாதை

பெருந்தலைவர் காமராஜர் அவருடைய பிறந்தநாள் இன்று. சுதந்திரபோராட்ட தியாகி, எளிமைக்கான எடுத்துக்காட்டு, தமிழகத்தின் மூன்றாவது முதல்வர், முன்னாள் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்று தன்னுடைய ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

ராதிகா சரத்குமார்

12 வருட கடின உழைப்பின் விளைவாக சரத்குமாரால் உருவாக்கப்பட்டது காமராஜருக்கான மணி மண்டபம் என்று ட்வீட் செய்துள்ள அவர், இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர், துணை முதல்வர், விருதுநகர் எம்.எல்.ஏக்கள், மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

கஸ்தூரி ட்வீட்

ஒரு காலத்தில் தமிழகம் நல்ல தலைவர்களை கொண்டிருந்தது என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

குஷ்பூ

உங்களைப் போன்ற மற்றொரு தலைவர் இனி கிடைக்கமாட்டார் என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பூவ் அறிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close