கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி! வைரலாகும் வீடியோ!

அப்துல்கலாம் பற்றி கிண்டலும் கேலியுமாக பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி, ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார், அன்று முதல் ‘நம்மவர்’ என்று கமல் அழைக்கப்பட்டு வருகிறார்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார்.

அன்று இரவு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில், தனது கட்சியின் கொடியை ஏற்றி, ‘மக்கள் நீதி மய்யம்’ என்று கட்சியின் பெயரையும் அறிவித்தார். அதே பொதுக் கூட்டத்தில், கமல்ஹாசன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இதில், பாரதி கிருஷ்ணகுமார் என்பவரும் ஒருவர். இவருக்கு தமிழ் ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகங்கள் உண்டு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராகவும் இவர் அங்கம் வகிக்கிறார்.

இந்த நிலையில், பாரதி கிருஷ்ணகுமார் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி கிண்டலும் கேலியுமாக பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 53 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், அவர் அப்துல் கலாமை சரமாரியாக கிண்டல் செய்து பேசியுள்ளார்.

தனது அரசியல் பயணத்தையே அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கிய கமல்ஹாசனின் கட்சியில் முக்கிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பாரதி கிருஷ்ணகுமார் பேசியிருக்கும் வீடியோ தான் இப்போது வைரல்.

நம்மவர் பதில் சொல்வாரா?

×Close
×Close