பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்

Mannar mannan death : . புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித் தந்துள்ளார்.

By: July 6, 2020, 6:19:26 PM

பாவேந்தர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக, புதுச்சேரியில் காலமானார்.

மன்னர் மன்னன், கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார். புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார். புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித் தந்துள்ளார்.

தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். மிகச் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் கவிஞர் . பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் நூலாக எழுதி வெளியிட்டார். இந்திய விடுதலைப்போராட்டத்தில் மட்டுமல்லாது மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றிருந்தார்.

தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய இவர் காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி ‌ஆர்., ஜெயலலிதா, தலைவர்கள் நெடுஞ்செழியன் , அன்பழகன் போன்றவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார்.

இவரது மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார்.இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.

நாளை இறுதிச்சடங்கு : புதுச்சேரியில் நாளை(07/07/2020 – செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளில் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என மன்னர்மன்னன் மகன் பாரதி தெரிவத்துள்ளார்.

புதுச்சேரி முகவரி

முகவரிஎண்:04 , 10 ஆவது குறுக்குத் தெரு
காந்தி நகர், புதுச்சேரி-605009

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Bharathidasan pavendar bharathidasan son mannar mannan kopathi tamil poet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X