Advertisment

பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடட்டும்; பாரதிதாசன் பல்கலை. ஊழியர்கள் கொந்தளிப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநரைக் கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
bdu staffs protest trichy

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநரைக் கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநரைக் கண்டித்து   பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்தக் கோரி பல்கலைக்கழக ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு: 

Advertisment

திருச்சி புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பல கல்லூரிகள் உறுப்புக்கல்லூரிகளாக இயங்கி வருகின்றன. 

இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  பணியாற்றி வரும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 350-க்கும் மேற்பட்டோர், தமிழக அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரிலும், தமிழக அரசின் நிதி குழு முடிவின்படியும், சென்னை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வரும் நிலையில், தமிழக அரசின் நிதி குழு முடிவின்படி 2017-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் தமிழக அரசின் விதியின் கீழ் ஊதியம் பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன் பெறுவதற்கான  தணிக்கை சான்றிதழ் வழங்கிய உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனர் முபாரக் அலி, தற்போது பணி ஓய்வு பெற்றுள்ள 30 பேருக்கு கடந்த ஓராண்டு காலமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுப்பதால், அவர்கள் ஓய்வூதிய பண பலன்களை பெற முடியாமல் தொடர்ந்து அலைகழிக்கப்பட்டு வருகிறார்கள்.

பல்கலைக்கழக பாரதிதாசன் பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி சென்னை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இணையாக  பெற்று வரும் ஊதியத்திற்கு தமிழக அரசின் மேதகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக 07.09.2015 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்,  உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராகவும் தமிழக அரசின் நிதி குழு முடிவுக்கு எதிராகவும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி குழு தீர்மானத்திற்கு எதிராகவும்   உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் மாநில உயர்மட்ட குழுவிற்கு மற்றும் தற்போதுள்ள பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டும்   என்ற உள் நோக்கத்தோடு கடிதம் எழுதி உள்ளதாகவும், இதனால் தங்களின் ஊதியத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் 450 பணியாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்  எனவும் தெரிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே நீதிமன்றத்தை முறையிட்டும், தமிழக அரசின் ஒப்புதலின் அடிப்படையில் ஊதியம் பெற்று வரும் தங்களை வேண்டுமென்றே ஊதியத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் உதவி இயக்குனர் செயல்படுவதாக குற்றம் சாட்டி பல்கலைக்கழக அலுவலகம் முன்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சி ஆர்.டி.ஓ அருள்  திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் மற்றும் நவல்பட்டு காவல் ஆய்வாளர் நிக்சன் ஆகியோர் தலைமையில் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது பின்னரும் இரவு 1 மணி வரை போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த மண்டல இணை இயக்குநர் ரேவதி அவர்கள் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியபோதும் உடன்பாடு எட்டப்படாததால் இன்று துணைவேந்தர் அலுவலகம் எதிரே சாமியான பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்டத்தில் துணை இயக்குனரை மாற்றவில்லை என்றால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாகவும் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்திக் கொள்ளுமாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்திற்கான கோரிக்கைகளை   பல்கலைக்கழக பதிவாளர்  நாளை (22.10.2024) சென்னை சென்று உயர்கல்வித்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், குறைகளை சுட்டிக்காட்டியும் உடனடியாக பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி தணிக்கை இயக்குனரை இடமாற்றம்  செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறியதன்படி மேற்கண்ட பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் சங்கம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஓய்வு ஊதியர்கள் சங்கம் ஆகியோர்கள் வருகிற வியாழக்கிழமை (24.10.2024) வரை கால அவகாசம் தந்து மேற்கண்ட போராட்டத்தை  தற்காலிகமாக நிறுத்தி வைத்து அனைவரும் பணிக்கு திரும்புவதாக அறிவித்தனர். இதனால் ஓரிரு நாட்கள் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment