தமிழக பாடத்திட்டத்தில் சிவாஜி கணேசன்! முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா

தமிழக பாடத்திட்டத்தில் சிவாஜி கணேசன் பற்றிய பாடத்தை சேர்த்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பள்ளிக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளது. அதில் நடிகர் சிவாஜி கணேசன் பற்றி ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. அந்த அறிக்கையில், “உலகின் மாபெரும் கலைஞன்; தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு; சிறந்த நடிப்புத்திறன் மூலம் ‘நடிகர் திலகம்’, ‘நடிப்புச் […]

bharathiraja wishes cm palaniswamy sivaji ganesan tn school syllabus - தமிழக பாடத்திட்டத்தில் சிவாஜி கணேசன்! முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா
bharathiraja wishes cm palaniswamy sivaji ganesan tn school syllabus – தமிழக பாடத்திட்டத்தில் சிவாஜி கணேசன்! முதல்வருக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா

தமிழக பாடத்திட்டத்தில் சிவாஜி கணேசன் பற்றிய பாடத்தை சேர்த்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு பள்ளிக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளது. அதில் நடிகர் சிவாஜி கணேசன் பற்றி ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

அந்த அறிக்கையில், “உலகின் மாபெரும் கலைஞன்; தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு; சிறந்த நடிப்புத்திறன் மூலம் ‘நடிகர் திலகம்’, ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட செவாலியே சிவாஜி கணேசனைப் பற்றி, மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் கள்ளிக்காடு, தான் சந்தித்த அனுபவங்களைத் தொகுத்து ‘சிதம்பர நினைவுகள்’ என்ற நூலாக வெளியிட்டார்.

இந்த நூலில் மாமேதை சிவாஜி கணேசனின் நடிப்புத்திறன், கலையுலக அனுபவங்கள், பெற்ற விருதுகள் எனப் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இதை, தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு புதிதாக உருவாக்கியுள்ள பாடத் திட்டத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் சேர்த்துள்ளது.

சிவாஜி கணேசனுக்குப் புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் தலைமுறை மாணவர்கள் அவருடைய கலைத்திறனை அறிந்து கொள்ளும் விதமாகவும் பாடத்திட்டத்தில் சேர்த்துச் சிறப்பித்த தமிழக அரசுக்கு, திரைத்துறையின் மூத்த கலைஞன் என்ற முறையில், கலையுலகம் சார்பாகவும், என் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharathiraja wishes cm palaniswamy sivaji ganesan tn school syllabus

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com