Advertisment

தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள்: திருமாவளவனுககு பா.ஜ.க அழைப்பு

தி.மு.க. கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bharatiya Janata Party invites Thirumavalavan

பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் என திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த வானதி சீனிவாசன்

கோவை காந்திபுரம் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் திறந்துவைத்தார்.

தொடர்ந்து, அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அ,ஆ,இ,ஈ பாடம் எடுத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இனி கட்டப்படும் அங்கன்வாடிகளுக்கு சோலார் திட்டம் வைத்துள்ளோம். அங்கன்வாடி மையங்களுக்கு அரசு அதிக கவனம் கொடுக்க வேண்டும்.

Advertisment

கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆட்சி அமைக்க முடியாததற்கான காரணத்தை கட்சி ஆராயும். பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்றும் வகையில் கர்நாடக தேர்தல் முடிவு எங்களை தயார்படுத்துகிறது.

பால்வாடி குழந்தைகளுக்கு அ,ஆ சொல்லிக் கொடுத்த வானதி சீனிவாசன்

பால்வாடி குழந்தைகளுக்கு அ,ஆ சொல்லிக் கொடுத்த வானதி சீனிவாசன்

மக்களிடம் நெருக்கமான அணுகுமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த தேர்தல் முடிவு உள்ளது. தோல்விக்கு குறிப்பிட்ட காரணம் என்று சொல்ல முடியாது. முதல்வர் கனவு கண்டு வருகிறார் அப்படி என்றால் திமுக எத்தனை முறை துடைத்தெறியப்பட்டுள்ளது.

திராவிட நிலப்பரப்பு என்று மற்ற மாநில முதல்வர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வார்த்தை அலங்காரத்திற்கு பயன்படுத்துகிறார்.காங்கிரஸ் ஏன் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த மாநிலத்தில் தோல்வியுற்றார் என்பதை கவனிக்கட்டும்.

தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். திமுக எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.டபுள் டிஜிட்டில் கூட இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.

பாஜகவின் வழக்கமான வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது.ஈரோடு இடைத்தேர்தல் நடந்தது. ஏன் ஒரு சட்டமன்றத்திற்கு அவ்வளவு அமைச்சர்களை வைத்து வேலை செய்தார்கள்.

தோல்வியின் காரணங்களை ஆராய்வோம் சரி செய்ய முயற்சிப்போம். சொந்தத் தொகுதியில் தோற்கப் பல காரணம் இருக்கலாம். சிடி ரவி தோல்வியுற்றதால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியாது என சொல்ல முடியாது.

அண்ணாமலை அவர் பங்களிப்பை மிக சிறப்பாக செய்துள்ளார். மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.பாராளுமன்றத் தேர்தலுக்கு கர்நாடகத்தின் தோல்வி பிரச்சனையாக இல்லை.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை. அப்போதும் முழுமையாக நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவினர் ஜெயித்தனர்.மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். பாஜக ஆட்சி நூறு சதவீதம் உறுதி.

திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எந்தப் பட்டியல் இன பிரச்னைக்கும் தீர்வு காண முடியவில்லை.

எதற்காக திருமாவளவன் அங்கு உள்ளார். திருமா சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்.

வாரிசு அரசியல் குடும்ப அரசியல் தான் திராவிட மடல் என நிரூபிக்கின்றனர்” என்றார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment