Advertisment

குறும்படத்தில் தோன்றிய பாரதியார்: மாணவ- மாணவியர் உற்சாகம்

பாரதி குறும்பட வெளியிட்ட விழா கோவை ஒசூர் சாலையில் உள்ள ஆருத்ரா அரங்கில் நடைபெற்றது. இளம் தலைமுறையினர் கவிஞர் பாரதியார் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக கோவையில் பாரதி குறும்படம் வெளியிடப்பட்டது.

author-image
WebDesk
New Update
Bharatiyar short film screened in Coimbatore

கோயம்புத்தூரில் பாரதியார் குறும்படம் திரையிடப்பட்டது.

பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவையில் அவரது வாழ்வியல்கள் மற்றும் தமிழ் கவிதைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறை பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் தெரிந்து. கொள்ளும் விதமாக "பாரதி"எனும்  பெயரில் குறும்படம் வெளியிடப்பட்டது.

அரை மணி நேரம்  ஓடக்கூடிய இந்த குறும்படத்தை அவிநாசி அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த தமிழ்த் துறைத் தலைவர்   முனைவா் போ.மணிவண்ணன் எழுதி, நடித்து, இயக்கியுள்ளாா். 

Advertisment

பாரதி குறும்பட வெளியிட்ட விழா கோவை ஒசூர் சாலையில் உள்ள ஆருத்ரா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாரதி குறும்படத்தைக் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் முனைவா் கலைச்செல்வி வெளியிட அவிநாசி அரசு கலைக் கல்லூரி முதல்வர் நளதம் பெற்றுக் கொண்டார்.

இது குறித்து பாரதி குறும்படத்தை இயக்கி நடித்துள்ள மணிவண்ணன், “பல ஆண்டுகளாக வகுப்பறைகளில் தமிழ் பாடங்களை எடுத்து வரும் நிலையில் தற்போது  கேமரா போன்ற நவீன தொழில் நுட்பங்களின்  அழுத்தம் மற்றும் தாக்கத்தை உணர முடிகிறது.

தமிழர்களின் பெரிய அடையாளமாக உள்ள பாரதியின் பிறந்த நாளில் மாணவர்களிடையே மொழி,மற்றும் தேச பக்தியை உருவாக்க இந்த குறும்படத்தை உருவாக்கி உள்ளோம்.

குறிப்பாக இந்த குறும்படத்தின் தொழில்நுட்பப் பணிகளை மாணவா்களே செய்துள்ளனர்” என்றார். இந்நிகழ்வில் இலக்கிய ஆா்வலா்கள், தமிழ்ப் பற்றாளா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் என பலர் கலந்து கொண்டனர். 

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment