பாரத்நெட் 2-ம் கட்ட பணிகள் : ரூ. 433 கோடிக்கு ஐ.டி.ஐயுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

குறைந்தபட்சம் விநாடிக்கு 1 ஜிபி ப்ராட்பேண்ட் சேவையை தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்டங்கள், 109 தொகுதிகள், 3103 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 845 வருவாய் கிராமங்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu news, Tamil News, Fiber Net Connection

BharatNet project : தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ₹432.97 கோடி பணி உத்தரவைப் பெற்றுள்ளதாக மல்டி-டெக்னாலஜி பொதுத்துறை நிறுவனம் ஐ.டி.ஐ. லிமிட்டட் திங்களனறு அறிவித்துள்ளது. பாரத்நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நிறைவேற்ற உள்ளது இந்த நிறுவனம்.

ஐ.டி.ஐ. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பேக்கேஜ் D க்காக தமிழ்நாட்டில் பாரத்நெட் கட்டம்-II இன் கீழ் பிராட்பேண்ட் இணைப்புக்கான பல்வேறு பணிகள் இந்த திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி, குறைந்தபட்சம் விநாடிக்கு 1 ஜிபி ப்ராட்பேண்ட் சேவையை தமிழ்நாடு முழுவதும் 10 மாவட்டங்கள், 109 தொகுதிகள், 3103 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 845 வருவாய் கிராமங்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபைபர் மூலம் இணைக்க முடியாத கிராம பஞ்சாயத்துகளுக்கான ரேடியோ இணைப்பு, அரசு வளாகங்கள், பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு (PHC) கிடைமட்ட இணைப்பை செயல்படுத்துவதையும் இந்த திட்டம் உறுதி செய்யும்.

கிராம பஞ்சாயத்துகளை தொகுதிகள், மாவட்ட மையங்கள் மற்றும் மாநில தலைமையகத்துடன் இணைக்க நிலம் மற்றும் வான்வழி ஃபைபர் உட்பட சுமார் 15,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஃபைபர் கேபிள் அமைக்கப்படும் என ஐடிஐ தெரிவித்துள்ளது. ஹை – ஸ்பீட் ப்ராட்பேண்ட் சேவையை 2 லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது இந்த பாரத்நெட் திட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bharatnet project iti receives rs 433 crore work order from tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express