Advertisment

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்; பெல் நிறுவன மேலாளர் பணிமனையில் மாடியில் இருந்து குதித்து பலி

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன அதிகாரி ஆன்லைன் கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்ததால் மன உளைச்சலில் பெல் பணிமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
BHEL Jobs; திருச்சி பெல் நிறுவனத்தில் 575 பணியிடங்கள்; ஐ.டி.ஐ முதல் பி.இ வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பெல் நிறுவன அதிகாரி ஆன்லைன் கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்ததால் மன உளைச்சலில் இருந்தவர் பெல் நிறுவன பணிமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவன அதிகாரி ஆன்லைன் கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்ததால் மன உளைச்சலில் இருந்தவர் பெல் நிறுவன பணிமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும் இந்த நிறுவனத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேசம் லக்னோ பகுதியை சேர்ந்த சிவ பூஜன் சிங் மகன் மஞ்சித் சிங் (43). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திருச்சியில் பெல் நிறுவனத்திற்கு டெல்லி பெல் நிறுவனத்தில் இருந்து பணி மாறுதல் பெற்ற, மஞ்சித் சிங் நிறுவனத்தின் சீனியர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி டிப்திசிங் இவர் பெல் வளாகத்தில் உள்ள பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மகளும், 6ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மஸ்ஜித் சிங் ஆன்லைனில் கிரிப்டோ கரன்சி பிட்காயின் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் பர்சேஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரிய அளவில் மஞ்சித் சிங் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனால் மஞ்சித் சிங் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment
Advertisement

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றவர் பெல் 2 அண்ட் 4 மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு சக ஊழியர்கள் வெளியில் வந்து பார்த்தபொழுது மஞ்சித் சிங் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை பெல் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே மஞ்சித் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெல் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment