சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மூலம் இயக்கப்படும் ரயில்களில், இனி மிதிவண்டியுடன் மக்களால் பயணிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. ஏனெனில் ரயில்களில் இடப் பற்றாக்குறை காரணமாக இந்த வசதியை நிறுவனம் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு, சிறப்பு வகுப்புப் பெட்டியில் சிறிய மற்றும் மடிக்கக்கூடிய மிதிவண்டிகளுடன் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதித்தது.
கொரோனா பெருந்தொற்று காலம் முடிவடைந்த பின்னரும், இந்த வசதியை வைத்திருப்பது மக்கள் பயணிப்பதற்கு இடையூறாக இருக்கிறது என்று புகார்கள் எழுந்துள்ளது. இதனால், இந்த வசதியை நிறுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு வகுப்பு கோச்சில் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்வதால், சைக்கிள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தனர். மேலும் மடிக்கக்கூடிய சைக்கிள்களை நிறுத்த இடம் இருந்தது. ஆனால் இப்போது அது 'மகளிர் மட்டும்' பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன்பு, தினமும் சராசரியாக 1.16 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வந்தனர். தற்போது, அவை 2.2 லட்சம் எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 67 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மட்டுமே, மெட்ரோ ரயில்களில் 2.7 லட்சம் பேர் பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர்.
52 நான்கு பெட்டிகள் கொண்ட ரயில்களைக் கொண்டு, தினமும் குறைந்தது 35 ரயில்களை இயக்குகிறது. மேலும், புதிய ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
118.9 கிமீ கட்டம்-2 க்கு வாங்கப்படும் டிரைவர் இல்லாத ரயில்களில் பயணிகள் சைக்கிள் கொண்டு வருவதற்கு இடமும் வசதியும் இல்லாமல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, கொச்சி மெட்ரோ ரயில்களில் சைக்கிள்களை அனுமதித்துள்ளனர், பெங்களூரு மெட்ரோ பயணிகள் ரயில் நிலையங்களில் சைக்கிள்களை நிறுத்த அனுமதிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil