கோவையில் இரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், கெமிக்கல் வெடித்து சிதறும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் தொழிற்சாலை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
கோவை சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் ஆர்பிகே இரசாயன (கெமிக்கல்) தொழிற்சாலை செயல்ப்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி செய்து கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கு இருந்த கெமிக்கல் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட தீ அங்கு இருந்த இரசாயனம் முழுவதும் பரவி மல மலவென தீப்பற்றி எரிந்தது.
இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த இரண்டு கெமிக்கல் ட்ரம் வெடித்து சிதறியது.
இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.தற்போது வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தால் தொழிற்சாலை முழுவதும் எரிந்து நாசமாகியது.அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலையை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பாளையம் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"