சென்னை போரூர் அருகேயுள்ள சின்ன போரூர் பிரதான சாலையில் இன்று காலை திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. சுமார் பத்தடி அகலம் மற்றும் ஐந்தடி நீளத்திற்கு ஏற்பட்ட பள்ளத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் அலுவலகம் செல்லும் பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தின் அருகே தடுப்பு கம்பிகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/2024/12/10/l4Gs1BQrKYTRqaaIICpu.png)
குடிநீர் குழாய் இணைப்பில் ஏற்பட்ட புடைப்பே திடீர் பள்ளத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அதே சமயம் சின்ன போரூர் பகுதியில் இதுபோல் திடீர் பள்ளங்கள் ஏற்படுவது தொடர் கதையாக இருப்பதால் இதுகுறித்து மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“