/tamil-ie/media/media_files/uploads/2020/09/Bigg-Boss-Arthi-Hindi-Imposition-Tweet.jpg)
பிக் பாஸ் ஆர்த்தி
இந்தி பேசாத மற்ற மாநிலத்தினர் மீது இந்தி திணிக்கப்படுவதாக சமீப நாட்களாக தீவிரமான புகார் எழுந்து வருகிறது. இந்தி எதிர்ப்புக்கு பெயர் பெற்ற தமிழகமும், தொடர்ந்து இதனை எதிர்த்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அடங்கிய டி சர்ட்டினை திரை பிரபலங்கள் அணிந்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் மெட்ரோ சிரிஷ் தொடங்கிய இந்த விஷயத்தை மற்ற திரைபிரபலங்களும், ரசிகர்களும், பொதுமக்களும் பின்பற்றி வருகிறார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது சகோதரர் மணிகண்டன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் இந்திக்கு எதிரான வாசகங்களை தாங்கிய டி சர்ட்டுகளை அணிந்திருந்த படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் காமெடி வேடங்களில் நடித்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஆர்த்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில், “நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்... ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு, விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் t.Shirt-யை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை” என்று தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.