நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

Bigg Boss Fame Yashika Anand Car Accident Chengalpattu இந்த விபத்து மதுபோதையில் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Bigg Boss Fame Yashika Anand Car Accident Chengalpattu Tamil News
Bigg Boss Fame Yashika Anand Car Accident Chengalpattu Tamil News

Bigg Boss Fame Yashika Anand Car Accident Chengalpattu Tamil News : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில், நள்ளிரவு 1 மணியளவில் அதிவேகமாக வந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்.

கார் கவிழ்ந்ததைக் கண்ட சாலையில் இருந்த சக வாகன ஓட்டிகள், அந்த காரில் பயணம் செய்த நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரு ஆண் நண்பர்களைப் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், யாஷிகாவின் தோழி, ஹைதராபாத்தைச் சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்ட விசாரணையில், மரணமடைந்தவர் யாஷிகா ஆனந்தின் தோழி என்பதும் அவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. வள்ளிச்செட்டியின் உடலைக் கைப்பற்றிய மாமல்லபுரம் காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து மதுபோதையில் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss fame yashika anand car accident chengalpattu tamil news

Next Story
Tamil News Today : கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக உள்ளது – ராகுல்காந்திRahul Gandhi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com