/tamil-ie/media/media_files/uploads/2019/10/yaa.jpg)
chennai, accident in chennai, Yashika Aannand, car, accident, biggboss fame, actress, youth, யாஷிகா ஆனந்த், கார், விபத்து, பிக்பாஸ், நடிகை
இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மட்டுமே பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இவர் தனது நண்பர்களுடன் தனது சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையில், யாஷிகாவின் கார், நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் உணவை டெலிவரி செய்யும் பரத் என்ற இளைஞன் நின்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அந்த கார், பரத்தின் மீது மோதியது. அதோடு நிற்காமல் பக்கத்தில் இருந்த கடையின் மீதும் மோதியது. இளைஞர் படுகாயமடைந்தார்.
அவர், சிகிச்சைக்காக, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாஷிகா காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.