Bigil Vijay Movie Review : பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி வெகுஜன மக்களின் நாடி துடிப்பை நன்கு கணித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். வரும் ரசிகர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைத்திராமல், ரசிகர்களின் உணர்வை வைத்தே படத்தை இயக்கியுள்ளார். 'பிகில்' படத்தில் நேர்பட அரசியல் பேசப்படவில்லை என்றாலும், மறைமுக அரசியல் ஆங்காங்கே வந்து செல்கிறது. பிகில் ராயப்பன் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற பாடலைக் கேட்கும் பொழுது, ரசிகர்கள் மத்தியில் கரகோஷங்கள் தான்.
பிகில் திரைப்படம ஷாருக் கானின் சக் தி இந்தியா, ஆமிர் கானின் தங்கல் போன்ற பாணியில் இல்லை என்பதை நாம் முதலில் புரிந்தாக வேண்டும். சக் தி இந்தியா போன்று முயற்சி செய்து பலனளிக்கவில்லையா ? அல்லது, திட்டமிட்டே அந்த சாயல் வேண்டாம் என்று அட்லி நினைத்தாரா? என்பது தான் இப்படத்தில் நமக்கு வரும் முதல் குழப்பம்.
ஸ்போர்ட்ஸ் படங்களில் பொதுவாக கோச்சாக வரும் நபர் தனது அணியை உருவாக்குவார், சிறந்த அணியை உருவாக்கும் யுக்திகளை யோசிப்பார். ஆனால், பிகிலின் மைக்கல் விஜய், அணியில் இருப்பவர்களை அவமதிப்பு செய்வதன் மூலம் , ஊக்குவிக்குறார். சில சமயங்களில் இந்த செயல் முறை சற்று கசப்பை எற்படுத்திகிறது. உதாரணமாக , அணியில் இருக்கும் ஒரு பெண் வீராங்கனையை பல முறை 'குண்டம்மா' என்று சொல்லி அவரை ஊக்குவிக்கிறார். ஆனால் , சமூகத்தில் இதன் வெளிப்பாடு சற்று ஏற்புடையதாக இருக்காது.
Bigil Vijay Movie Review
விஜய்யின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராயப்பன் படத்தின் மிகப்பெரிய பலம். ராயப்பன் கதாப்பாத்திரத்தின் எதார்த்தம் நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். இருந்தாலும், நாயகன் கமல ஹாசனையும், காலா ரஜினியையும் நியாபகப் படுத்துவதாகேவே நான் நினைக்கின்றேன் . மெர்சல் அபூர்வ சகோததர்களை நியாபக படுத்தினால், பிகில் தற்போது எடுக்கப்பட்ட நாயகன் திரைப்படம்.
ஜாக்கி ஷிராஃப், டேனியல் பாலாஜி அவர்களின் திறமையை இன்னும் வெளிபடுத்த வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
நயன்தாரா, மைக்கல் விஜய்யின் காதலில் மட்டுமே வாழ்கின்றார். வழக்கமான தமிழ் ஹீராயின் என்ன செய்வார்களோ? அதே தான் செய்துள்ளார்.