அப்பா உடல்நலம் பெற வேண்டி பிரார்த்தித்த ரசிகர்களுக்கு நன்றி : சவுந்தர்யா ரஜினிகாந்த்

Rajini back to chennai : நாள் எனது வாழ்நாளில் எப்போதும் மறக்கமுடியாத நாள். ஜூலை 13, 2011, அப்பா மருத்துவ சிகிச்சையை முடித்து நலமுடன்...

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று உடல்நலம் பெற்று ரஜினி சென்னை திரும்பிய வீடியோவை,மகள் சவுந்தர்யா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரில், அந்த வீடியோவிற்கு தலைப்பாக, சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாவது, இந்த நாள் எனது வாழ்நாளில் எப்போதும் மறக்கமுடியாத நாள். ஜூலை 13, 2011, அப்பா மருத்துவ சிகிச்சையை முடித்து நலமுடன் சென்னை திரும்பிய நாள். 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்க அப்பாவுக்காகவும், எங்களது குடும்பத்திற்காகவும் இறைவனை பிரார்த்தித்த ரசிகர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சுவாச பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக 2011, மே 16ம் தேதி, ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல்சிகிச்சைக்காக, அவர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடல்நிலை சரியானதை தொடர்ந்து, ஜூன் 11ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 13ம் தேதி சென்னை திரும்பினார்.

ரஜினி, சிகிச்சை முடிந்தபின் கோச்சடையான், லிங்கா, கபாலி காலா உள்ளிட்ட படங்களில் நடித்துமுடித்துள்ள ரஜினி, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

Web Title:

Soundarya rajinikanth posted a video on twitter

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close