சென்னையில், 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார்.
அப்போது, “சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு மற்றும் கரோனா உடன் ஒப்பிட்டு பேசினார். மேலும், “சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்தப் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக கூறி பல்வேறு இடங்களில் உதயநிதிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பிகார் மாவட்ட நீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உதயநிதி ஸ்டாலின் பேச்சு மக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு பீகார் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஏப்.1ஆம் தேதி உதயநிதி ஆஜராக கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“