தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் நிலை குறித்து அறிந்துகொள்ள பீகார் மாநில அரசு அமைத்த குழு சென்னை வந்துள்ளது.
தமிழகத்தில் வட மாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் போலியான செய்திகள் பரவியது. இதுகுறித்து உண்மை நிலையை கண்டறியவும், அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 4 பேர் கொண்ட குழுவை பீகார் மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழு மாநில கிராம வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று தமிழகம் வந்தடைந்தனர்.
இந்த குழு தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகரிகளிடம் கலந்து பேசி, பிகார் தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்ய ஆலோசனை வழங்க உள்ளது.
மேலும் இந்தக் குழு திருப்பூர் சென்று, அங்கு வேலை செய்யும் பிகார் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அதிகாரிகள் சந்தித்து பேச உள்ளது.