18 வயது பூர்த்தியடையாத இளஞ்சிரார்கள் இரு சக்கர வாகனம் இயக்கினால், வாகனத்தின் உரிமையாளருக்கு கடும் அபராதம் விதிக்கப்படுவதோடு, வாகன பதிவுச் சான்று (ஆர்.சி) ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்று 2024 பிப்ரவரி மாதம் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இதுபோன்ற சம்பவங்களில் காப்பீடு நிறுவனங்கள் முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்றும் பின்னர் சம்பந்தப்பட்ட நபரிடம் காப்பீடு தொகையை வசூலிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இதற்கிடையில், மத்திய மோட்டார் வாகனங்கள் சட்டம 2019ன் படி விபத்துக்கு காரணமான வாகனத்தை சிறாரோ அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாதவரோ ஓட்டினால் மட்டுமே விபத்தில் பாதிக்கப்பட்டவர் வாகன உரிமையாளரிடம் இழப்பீடு கோர முடியும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தப்பட்ட விதிகள் 2024 எப்ரல் மாதத்துக்கு பின்னர் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சமீபத்தில் இதுபோன்ற வழக்கு ஒன்றில், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் இயக்கிய வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமமும் ஓராண்டுக்கு பறிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“