திருச்சி போலீஸாருக்கு தண்ணி காட்டிய பைக் திருடர்கள்; கல்லணை தண்ணீரில் சிக்கி கைது
திருச்சி போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பைக் திருடர்கள் போலீசார் பிடியில் இருந்து தப்பிய நிலையில், கல்லணை தண்ணீரில் குதித்து தப்பிக்க முயன்றபோது மீண்டும் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பைக் திருடர்கள் போலீசார் பிடியில் இருந்து தப்பிய நிலையில், கல்லணை தண்ணீரில் குதித்து தப்பிக்க முயன்றபோது மீண்டும் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பைக் திருடர்கள் போலீசார் பிடியில் இருந்து தப்பிய நிலையில், கல்லணை தண்ணீரில் குதித்து தப்பிக்க முயன்றபோது மீண்டும் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
திருச்சியின் மிக முக்கிய சுற்றுலா தலமான கல்லணை பகுதியில் அடிக்கடி செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் கல்லணை தோகூர் சாலையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த வாகன சோதனையின்போது அவ்வழியே தஞ்சை பகுதியில் இருந்து ஆர்என்-5 இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட முயற்சித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் ஓட்டிக்கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனால் போலீஸாரும் அவர்களை விரட்டிய நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக கல்லணை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தப்பி ஓடி புதர்களுக்குள் மறைந்தனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில் அவர்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை தோகூர் போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து நிறுத்தி வைத்திருந்த நிலையில், இரவு பத்து மணிக்கு மேல் அந்த வாலிபர்கள் தோகூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது இருசக்கர வாகனத்தை எடுக்க முற்பட்டனர். அவர்களைக் கண்ட போலீஸார் மீண்டும் விரட்டியபோது, போலீசாரிடம் இருந்து மீண்டும் தப்பிக்க அங்கிருந்து ஓடி கல்லணை கரிகால சோழன் யானை சிலை அருகே காவிரி ஆற்றில் குதித்துள்ளனர்.
காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் எதிர்நீச்சல் அடிக்க முடியாமல் காவிரியில் குதித்த வாலிபர்கள் தவித்து அபாயக்குரல் எழுப்பினர். அப்பொழுது இரவு நேரத்தில் அந்த பகுதியில் இருந்த அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் காவிரி அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் இருந்து மனிதர்களின் சத்தம் கேட்பதை பார்த்து என்னவென்று லைட் அடித்து பார்த்துள்ளனர். அப்பொழுது இரண்டு பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அப்பகுதி வாலிபர்கள் கல்லணையில் குதித்து அவர்களை மீட்டு தோகூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களிடம் தோகூர் போலீசார் விசாரித்தபோது திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் இவரது மகன் ஆரோக்கிய செல்வகுமார். இவர் தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பன் திருச்சி காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த அப்துல்லா மகன் முகமது செலார்ஷா என்பதும் தெரிய வந்தது. போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இவர்கள் இருவரும் கும்பகோணம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு திருச்சி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசாருக்கு தண்ணி காட்டிய கயவர்களை தண்ணீரில் வைத்து கைது செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”