/tamil-ie/media/media_files/uploads/2023/08/arre.jpg)
கணக்கில் வராத ரூ.25000 ரொக்கம் பறிமுதல்
திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று இருந்துள்ளது.
அந்த காலி மனையில் வீடு கட்ட எண்ணிய நாகராஜன் கடந்த 14 8 2023 அன்று தனது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டுவதற்காக திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சியின் 48வது வார்டு வரி வசூல் மையத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் ராஜலிங்கம்(வயது 54) என்பவரை சந்தித்து வரி செலுத்த விவரம் கேட்டுள்ளார். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பில் கலெக்டர் ராஜலிங்கம் நாகராஜனிடம் காலி மனை வரிவிதிப்பு தொடர்பான விண்ணப்பத்தினை கொடுத்து ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மீண்டும் வந்து தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார்.
அதன் பேரில் நாகராஜன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கடந்த 23 8 2023 அன்று சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரிவசூல் மையத்திற்கு சென்று பில் கலெக்டர் ராஜலிங்கத்தை சந்தித்து காலி மனை வரிவிதிப்பு தொடர்பான விண்ணப்பத்தினை கொடுத்துள்ளார். விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்ட பில் கலெக்டர் ராஜலிங்கம் நாகராஜனின் காலி மனைக்கு வரி விதிப்பு நிர்ணயம் செய்து கொடுக்க தனக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பின் நாகராஜன் கேட்டுக் கொண்டதன் பேரில் பில் கலெக்டர் ராஜலிங்கம் 2000 ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே உங்களது காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து கொடுக்க முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் நாகராஜனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சப்பணத்தை இன்று 25 8 2023 மதியம் சுமார் 12.30 மணியளவில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் வைத்து பில் கலெக்டர் ராஜலிங்கம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
மேலும் பில் கலெக்டர் ராஜலிங்கத்தின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இருந்த கணக்கில் வராத ரூ.25 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இதனை அடுத்து அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் துறை ரீதியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி. வருகின்றனர்.இன்று நண்பகள் திருச்சி மாநகராட்சி பில் கலெக்டர் ஒருவர் லஞ்ச வழக்கில் சிக்கியது மாநகராட்சி அலுவலகம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.