கோகிலபத்மபிரியா நடேசலிங்கம் (பிரியா), நடேசலிங்கம் முருகப்பன் (நடேஸ்) என்ற இருவரும் தனித் தனியாக ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் ஆஸ்திரேலியாவிற்கு தப்பி சென்றார்கள்.
இருவருக்கும் ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாக்கள் வழங்கப்பட்டன. இவர்கள் இருவரும் ஆத்திரேலியாவில் முதன் முதலில் சந்தித்து திருமணமும் செய்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவில் பிலோலா என்ற இடத்தில் சந்தோசஷமாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்களுக்கு கோபிகா(நான்கு வயது ) மற்றும் தருணிகா(இரண்டு வயது) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
பிரியா மற்றும் நடேஸ் ஆகியோர்களின் விசா கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முடிவடைந்தது. பிரியா,நடேஸ், கோபிகா ஆகியோர்களின் விசாக்கள் மூலம் இனி ஆஸ்திரேலியாவில் தங்க முடியாது , உடனடியாக அவர்கள் ஸ்ரீலங்காவிற்கு நாடுக் கடத்த வேண்டும் என்று அங்குள்ள பெடரல் சர்க்யூட் கோர்ட் உத்தரவிட்டது .
/tamil-ie/media/media_files/uploads/2019/09/r0_0_800_600_w1200_h678_fmax-300x225.jpg)
இதனால், கடந்த மார்ச் மாதம் 8, 2019 தேதி முதல் மெல்போர்ன் அகதிகள் முகாமில் தங்க வைக்கப் பட்டிருந்தனர். பிறகு, கடந்த வியாழனன்று, அவர்களை ஸ்ரீ லங்காவிற்கு அனுப்பி வைக்க விமான நிலையத்திற்கும் கொண்டு வரப்பட்டனர். அங்கு தான் கதையில் பெரிய திருப்பம் எற்பட்டிருக்கிறது .
விமானம் பாதி வழியில் ஸ்ரீ லங்காவை நோக்கி நகரும் போது, நீதிபதி அவர்களை ஆஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்று போன் மூலம் உத்த்ரவிட்டுள்ளார். இரண்டு வயதாகும் தருணிகா விசாவை இன்னும் அரசாங்கத்தால் முழுமையாக நிராகரிக்க படவில்லை, விசாரிக்கப் படவும் இல்லை. எனவே அந்த நான்கு போரையும் ஆஸ்திரேலியாவிற்கே திரும்ப இறுதி நிமிடத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த தமிழ் குடும்பத்திற்காக ஆஸ்திரேலியா முழுவதும் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக, கோபிகா அனைவரது கற்பனையையும், மனிதாபி மானத்தையும் ஈர்த்திருக்கிறாள் என்றால் அது மிகையாகாது.
மேலும், இந்த வழக்கு முடியும் வரை அவர்கள் ஆஸ்திரேலியாவிலே தங்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. வழக்கு முடிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அது வரை அவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.