திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன வளாக புத்தாயிரம் பூங்காவில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை வன அலுவலர்கள் தொடங்கினர். இது குறித்த விபரம் வருமாறு;
தமிழ்நாடு முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன புத்தாயிரம் பூங்கா வளாகத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் திருச்சி வன கோட்ட அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி வன கோட்டம் சார்பில் மாவட்ட வன உதவி அலுவலர் சம்பத்குமார் தலைமையில் வன காப்பாளர்கள், கல்லூரி தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வன அலுவலர்கள் கூறுகையில்;
ஜனவரி மாதத்தில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது தற்பொழுது இன்றும், நாளையும் தரைவால் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

இதில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பெல் நிறுவன வளாகம் மற்றும் என் ஐடி, கல்லூரி உள்ளிட்ட கல்லூரி வளாகங்களில் இந்த கணக்கெடுக்கும்பணி நடைபெற்று வருகிறது.
இன்று காப்புக்காடுகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியின் முக்கிய நோக்கம் பறவைகளின் வாழ்வியல் உணவு மற்றும் அயல் நாட்டு பறவைகள் கணக்கில் எடுக்கப்படும் பறவைகளால் தான் காடுகளின் பரப்பளவு பராமரிக்கப்படுகிறது. அதனால் பறவைகள் கணக்கெடுப்பு மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது.

இதில் திருச்சி வன கோட்டத்தில் உள்ள களப்பணியாளர்கள், வனசரகர்கள் கோபிநாத், தினேஷ், ரவி மற்றும் இயற்கையால் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பறவை ஆராய்ச்சியாளர்கள் இந்த கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,

இதில் பெல் புத்தாயிரம் பூங்கா பகுதியில் எடுக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் புன் முதுகு மரம் கொத்தி, பச்சை கிளி, தேன் சிட்டு, அரச வாழ் ஈபிடிப்பான், வாழ் காக்கை, மைனா, மணிப்புறா, கொண்டலவாத்தி, மயில், நீலவால் கிச்சன் உள்ளிட்ட பறவைகள் கணக்கு எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்