Advertisment

சென்னையில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை... ஹெல்மெட் அணிந்த நபர்களுக்கு வலைவீச்சு

சென்னை அயனாவரத்தில் மார்க்கெட் பகுதியில் பிரியாணி கடை நடத்திவந்தவர் நாகூர் கனி.

author-image
WebDesk
Nov 03, 2022 03:06 IST
Biryani shop owner hacked to death in Chennai

கொல்லப்பட்ட பிரியாணி கடை உரிமையாளர் நாகூர் கனி

சென்னையில் புதன்கிழமை (நவ.2) மாலை பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை அயனாவரத்தில் மார்க்கெட் பகுதியில் பிரியாணி கடை நடத்திவந்தவர் நாகூர் கனி. 33 வயதான இவர் நேற்று மாலை 7 மணியளவில் கடையில் நின்றிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் நாகூர் கனி மாலை கடையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது ஏற்கனவே அங்கிருந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களால் நாகூர் கனியை கொடூரமாகத் தாக்கினர்.

இதில் பலத்த காயமுற்ற நாகூர் கனி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து சென்னை அயனாவரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

நாகூர் கனி முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரின் கொலையில் ஈடுபட்ட ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் யார்? அருகில் உள்ள ஏதேனும் சிசிடிவி கேமராக்களில் இந்தக் கொலை பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும், இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற மர்மநபர்களையும், அவர்களின் பைக் எண்ணையும் போலீசார் தேடிவருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் பிரியாணி கடை உரிமையாளர் கொல்லப்பட்ட விவகாரம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment