பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 123-வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ('Rise of New India') - 'ரைஸ் ஆஃப் நியூ இந்தியா' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நேற்று (ஜூலை 6) நடைபெற்றது.
Advertisment
டெல்லி டாக்டர்.ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை இயக்குனர் அனிர்பன் கங்குலி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "ஆர்ட்டிகள் 370 நீக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி. அவரின் 123-வது பிறந்த நாளை கொண்டாடுகிறோம். ரவீந்திரநாத் வழக்கு குறித்து பேசிய அண்ணாமலை, அவரின் ஜட்ஜ்மெண்ட் இன்னும் படிக்கவில்லை. அதைப் பார்த்த பின்பு அதன் தகவலை தெரிவிக்கிறேன்.
அறப்போர் இயக்கம் டிரான்ஸ்பார்மம் வாங்கியதாக ரூ. 397 கோடி ஊழலை தெரிவித்துள்ளனர். டெண்டர் எப்படி நடந்தது என தெரிவித்துள்ளனர். டெண்டர் பிக்சிங் நடந்துள்ளது. அறப்போர் செய்திக்கு நாங்கள் ஆதரவு. அறப்போர் புகாருக்கு விசாரணை செய்ய வேண்டும். முதல்வர் இதிலும் செந்தில் பாலாஜி போல காப்பாற்றப் போவாரா?
ஆளுநர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆளுநர் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். தி.மு.க இத்தனை காலம் நம்மை ஏமாற்றி உள்ளது. ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என்பதை வைத்து சாதகப் படுத்திக் கொள்கின்றனர். சி.பி.ஐ ஒரிஜினல் பேப்பர் ஆகியவற்றை கொடுக்காத போது ஆளுநர் எப்படி செயல்படுவார். ஆர்.எஸ் பாரதி பேசும் பேச்சுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. என்னுடைய தொண்டர்கள் அண்ணாமலையை பிரியாணி போட்டு விடுவார்கள் என அவர் தெரிவிக்கிறார்.
அருவாள் யார் புடிச்சாலும் வெட்ட தான் செய்யும். நாம் விவசாயி வேற. ஒரு கன்னத்தை அடித்தால் மறு கன்னத்தை காட்ட அரசியலுக்கு வரவில்லை. என்ன தலைகீழாக நின்னு தோப்பு காரணம் போட்டாலும் 2024-ல் 400 எம்.பி பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவது உறுதி. தமிழகத்தில் 39 இடங்கள் வருவது உறுதி" எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“