scorecardresearch

பொள்ளாச்சி கனிம வளக் கொள்ளை: பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை எச்சரிக்கை

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி கனிம வளக் கொள்ளை: பா.ஜ.க ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை எச்சரிக்கை

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கனிமவள கொள்ளையை தடுக்காவிட்டால் தமிழக எல்லை பகுதிகளை எனது தலைமையில் செக் போஸ்ட் அமைத்து வாகனத்தை தடுப்போம் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை அண்ணாமலை மேடை பேச்சு.

கேரளா எல்லை பகுதியில் உள்ள பொள்ளாச்சி கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்களில் கல்குவாரிகள் அமைத்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறியும் இதை தடுத்து நிறுத்த கூறியும், இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

இதில்  அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில் தொடர்ந்து இப் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளால் இப்பகுதி பாலைவனமாக மாறுவதற்கு  அதிக அளவு  வாய்ப்புகள் உள்ளது

123 ஆண்டுகளுக்கு முன்பு  தமிழக  கேரளா மாநிலம் நல்லேபுள்ளி என்ற ஊரில் ஒரே நாள் இரவில் பூகம்பத்தினால் 9 ஆயிரம் பேர் இறந்தள்ளனர். 1947 பிறகு கடந்ததிமுக  ஆட்சி  வரை 50 அடி 65 அடி மட்டுமே தோண்டப்பட்ட கனிம வளங்கள்   கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 அடிக்கு மேல் அதிகப்படியாக சுரண்டப்படுவதாகும்.

இது அடுத்த தலைமுறை பாதிக்கின்ற பிரச்சனை என்றும் பூமிக்கு கீழே மெல்ல மெல்ல வெப்பம் அதிகரிப்பதால் 15 வருடங்களில் பாதிப்பு அதிகரிக்கும்.பீகார் சத்தீஸ்கர் மாநிலங்களில் நிலக்கரி ஊழலில் 20 ஆண்டுகளுக்கு பின்பு சிறை செல்கின்றனர் கனிம வள  ஊழலில் ஈடுபடுவேர் சிறை செல்வது உறுதி.

வாகனங்களில் 12 யூனிட் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள் 3 யுனிட் மட்டுமே தமிழக அரசுக்கு பணம் கட்டுகின்றனர் மீதம் உள்ள கோபாலபுரம் பகுதியைச்  சேர்ந்தவர் மற்றும் V.P& Co  நிறுவனத்தினர் பயனடைகின்றனர்,

அதிகப்படியான பாரம் ஏற்றி செல்லும்  லாரிகளால் சாலைகள் பாதிப்படைகின்றனர் இதனால் பொதுமக்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 20 நாட்களுக்குள் தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் தானே இறங்கி தமிழக எல்லையோரத்தில் உள்ள 11  செக்போஸ்ட்  முன்பு பாஜக கட்சி நிர்வாகிகள் வைத்து வாகனங்களை தடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கு   மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினார் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்ட கோசங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp annamalai charges on dmk government

Best of Express