Advertisment

ஸ்ரீரங்கத்தில் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்; இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு - அண்ணாமலை கடும் கண்டனம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
a srirangam clash annamalai

அண்ணாமலை கடும் கண்டனம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கும் கோயில் பணியாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் விவகாரத்தில், கடும் கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை என தி.மு.க அரசை சாடியுள்ளார்.

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று (12.12.2023) திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், 

அமாவாசை நாளான இன்று ஏராளமானோர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குவிந்தனர். இதனால், அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் கோவில் காவலாளிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் முந்திக்கொண்டு செல்ல முயன்றபோது, கோயில் காவலாளிகளுக்கும் ஆந்திர ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு மோதலாக மாறியது. இந்த மோதலில் பக்தர் முகத்தில் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து, ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பக்தர்கள் கூச்சலிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உதவி ஆணையர், ஆந்திர ஐயப்ப பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் பக்தர்கள் - காவலாளி இடையேயான மோதல் கோவில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களுக்கும் - கோயில் பணியாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து இந்து அறநிலையத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதில், “ஆந்திராவைச் சேர்ந்த 34 பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என மிகுந்த ஓசை எழுப்பி உண்டியலை பிடித்து பக்தர்கள் ஆட்டிக்கொண்டிருந்தனர். அப்போது கேள்வி கேட்ட கோவில் பணியாளரை தலை முடியை பிடித்து அதே உண்டியலில் மோதச் செய்துள்ளனர். மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்யவிடாமல் அந்த பக்தர்கள் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதலுக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும், இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத அரசு, இந்துக் கோயில்களில் இருக்க வேண்டியதில்லை என தி.மு.க அரசை அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்து தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு அரசாங்கம், இந்துக் கோவில்களில் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஐயப்ப பக்தர்கள் 42 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலையில் இருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பியிருக்கிறார்கள்.

நீண்ட வரிசையில் பக்தர்களை காத்திருக்க வைத்ததை ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்பியதன் விளைவாக, கோவில் வளாகத்திற்குள் ரத்தக்களரி ஏற்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையை கோவில் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பா.ஜ.க ஏன் விரும்புகிறது? என்பதற்கு பல காரணங்களில் அவர்களின் ஆணவமும் ஒரு காரணம்.

கோவில் புனிதத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக தமிழக பா.ஜ.க-வின் திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் இன்று (12.12.2023) ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

 

எல். முருகன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும்  தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்..! கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை..! தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை. இந்துக்களை பிடிக்காத தி.மு.க அரசிடம் வேறு எதை எதிபார்க்க முடியும்..! தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment