இந்த ஆண்டு மார்ச் மாதம் முடியும் போது தமிழகத்தின் மொத்த கடன் 8,34,544 கோடி ரூபாய். அதாவது தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீது 3.79 லட்ச ரூபாய் தமிழக அரசு கடன் வைத்துள்ளது, என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
புதன்கிழமை ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில், ’என் மண் என் மக்கள்’ நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, அப்போது மக்களுடன் எடுத்த புகைப்படங்களை தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது,
“திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, சேலத்துக்கும் 1,100 கோடி மதிப்பிலான 41.4 கிமீ தொலைவு சேலம்-மேக்னசைட் சந்திப்பு -ஓமலூர் -மேட்டூர் அணைப் பகுதிக்கான ரயில் வழித் தடங்களை இருவழிப் பாதையாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளில், தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு பணம் கிடைத்ததோ அதை விட இரண்டரை மடங்கு அதிக பணத்தை பிரதமர் மோடி அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை அமைக்க, தமிழகத்தில் ரயில்வே துறையை நவீனப்படுத்த, தமிழகத்தின் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருள்கள், இலவச மருத்துவ சிகிச்சை, தரமான வீடு, கழிவறை, குழாய் மூலம் குடிநீர், சமையல் எரிவாயு இணைப்பு போன்ற பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் 10.76 லட்சம் கோடி ரூபாய் நமது மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கியது பாரதிய ஜனதா கட்சி. மத்தியப் பிரதேச மாநில முதல்வராக ஒரு பழங்குடித் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
— K.Annamalai (@annamalai_k) January 3, 2024
ஆனால், சமூக நீதி, திராவிட மாடல் ஆட்சி என்று வாய் கிழிய பேசும் திமுக, ஏற்காடு மலைக் கிராமங்களுக்கு சரியான சாலை… pic.twitter.com/XfeLEHZFAT
தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மலைவாழ் பழங்குடி மக்கள் உள்ளனர். பழங்குடியினருக்கான மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2018 முதல் 2021ஆம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1425.18 கோடி ரூபாய்.
தமிழகத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதி 2.85 கோடி ரூபாய்.
வனஉற்பத்தி விற்பனை மையங்கள் என்ற திட்டத்தின் மூலமாக மலை கிராமங்களில் செய்யப்படும் உற்பத்தியை விற்பனை செய்ய சுயஉதவி குழுக்களை இணைத்து, கடந்த 3 ஆண்டுகளில் 342 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்துள்ளது. இந்தியாவில் 3225 வனஉற்பத்தி விற்பனை மையங்கள் உள்ளன.
நாடு முழுவதும் 694 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,15,169 பழங்குடியினர் சமுதாய மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்திற்கு 6 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை வழங்கியுள்ளது மத்திய அரசு.
அதில் 2,488 மலைவாழ் பழங்குடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளிகளுக்கு இந்த ஆண்டு 8.67 கோடி ரூபாய் நமது மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி ஆக்கியது பாரதிய ஜனதா கட்சி. மத்தியப் பிரதேச மாநில முதல்வராக ஒரு பழங்குடித் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஆனால், சமூக நீதி, திராவிட மாடல் ஆட்சி என்று வாய் கிழிய பேசும் திமுக, ஏற்காடு மலைக் கிராமங்களுக்கு சரியான சாலை வசதிகள் கூடச் செய்து தரவில்லை. அவசர காலங்களில் மருத்துவமனை செல்லும்போது கூட துணியில் கட்டி தான் நோயாளிகளையும், கர்ப்பிணி பெண்களையும் தூக்கிச்செல்லும் அவல நிலை தற்போது வரை நடைபெற்று வருகிறது. சேர்வராயன் மலை பகுதியில் உள்ள 93 குக்கிராமங்கள் பல தலைமுறைகளாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளனர்
இந்த ஆண்டு மார்ச் மாதம் முடியும் போது தமிழகத்தின் மொத்த கடன் 8,34,544 கோடி ரூபாய். தமிழகத்தில் சுமார் 2.2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அதாவது 2.2 கோடி குடும்பங்கள். ஒவ்வொரு குடும்பத்தின் மீது 3.79 லட்ச ரூபாய் கடன் வைத்துள்ளது தமிழக அரசு.
கடந்த 3 ஆண்டுகளில் 2.69 லட்ச கோடி ரூபாய் கடனை கூட்டியுள்ளது. இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலங்களில் நம்பர் ஒன்னாக தமிழகத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கவுதம் சிகாமணி, தொகுதிக்கு வருவதே இல்லை. இவரது தந்தை அமைச்சர் பொன்முடி சிறை சென்றதைப் போல, செம்மண் கடத்திய ஊழலுக்கு இவரும் சிறைக்கு செல்வார். ஒரு குடும்பத்துக்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல் திமுக கூட்டணியை மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். பாஜகவுக்கு, பிரதமர் மோடி அவர்களுக்காக தமிழகம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், தமிழகத்தை ஊழலற்ற நேர்மையான மாநிலமாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் மாநிலமாக முழுமையாக மாற்றும்”. இவ்வாறு அண்ணாமலை அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.