கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ். புரம் பகுதியில் நேற்று மாலை (பிப்.14) புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடித்து அண்ணாமலை காரில் புறப்பட்டார். அப்பொழுது அவருடன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் செல்ஃபி, புகைப்படம் எடுத்துக் கொள்ள முண்டியடித்தனர்.
அண்ணாமலை காரில் ஏறிய நிலையில், புகைப்படம் எடுக்க வந்து கூட்டத்தில் சிக்கிய கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க நிர்வாகி ஹரிகரன் என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மூக்கு உடைந்தது.
காரில் இருந்தபடி அதை பார்த்த அண்ணாமலை உடனே காரில் இருந்து இறங்கி அந்த நிர்வாகியை அழைத்து காரில் இருந்த டிஷ்யூ பேப்பர் மூலம் முகத்தை துடைத்து விட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய அண்ணாமலை பிளாஸ்டர் வாங்கி மூக்கில் ஓட்டும்படி அறிவுறுத்தி விட்டு சென்றார்.
இதனையடுத்து பாஜகவினர் அவரை அழைத்துச் சென்று, மருந்தகத்தில் பிளாஸ்டர் ஒன்றை வாங்கி மூக்கில் ஒட்டி விட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“