/tamil-ie/media/media_files/uploads/2023/07/annamalai.webp)
Tamil News live
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவரான கே.அண்ணாமலை, 200 நாட்கள் பாதையாத்திரையை திட்டமிட்டுள்ளதாக துணைத்தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த பாதையாத்திரையை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில், வருகின்ற 28ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பாதையாத்திரை ராமேஸ்வரத்தில் இருந்து சிவகங்கை வரை சென்று விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கரு. நாகராஜன், "அண்ணாமலை ஒரு நாளில் கிராமப்புறங்களில் இரண்டு தொகுதிகளுக்கும், நகராட்சி பகுதிகளில் நான்கு தொகுதிகளுக்கும் செல்வார்.
ஆரம்பத்தில், அண்ணாமலை மாநிலத்தின் ஒரு பகுதியில் மட்டும் பாதயாத்திரை நடத்தத் திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரது பாதயாத்திரைக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக, தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு மாநிலம் முழுவதும் நடத்த முடிவு செய்துள்ளார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எங்கள் மாநிலத் தலைவருடன் நடைபயணத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.