முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை தாக்கிய திமுக எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவருடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது இரவு 10 மணிக்குள் FIR பதிவு செய்யவில்லை என்றால் திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள பாரதி சிலை அருகே அமர்ந்து அறப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என நேற்று பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
திமுக எம்.பி மீது FIR பதிவு செய்யப்படாததை அடுத்து, பொன்னார் பாரதி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து பொன்னாரை திருநெல்வேலி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையை கண்டித்து இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக அறிவித்தது.
இதனையடுத்து, பொன்னார் கைதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை உள்பட பல இடங்களில் இன்று பாஜகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil