scorecardresearch

காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட நாங்க ரெடி – முதல்வரிடம் அண்ணாமலை கோரிக்கை

சென்னை கிண்டியில் உள்ள கர்மவீரர் காமராஜர் நினைவிடத்தின் அவல நிலையை பார்த்து மிக வருந்தினேன்.

காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட நாங்க ரெடி – முதல்வரிடம் அண்ணாமலை கோரிக்கை

காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணமாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அதே வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் 46ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திலும் அண்ணாமலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


பின்னர், காமராஜர் நினைவிடத்தின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அண்ணாமலை, “இன்று சென்னை கிண்டியில் உள்ள கர்மவீரர் காமராஜர்  நினைவிடத்தின் அவல நிலையை பார்த்து மிக வருந்தினேன்.  காங்கிரஸ் இந்த மாபெரும் தலைவரை மறந்துவிட்டது. திமுக காமராசர் நினைவுகளை துறந்துவிட்டது” என பதிவிட்டிருந்தார்.


மற்றொரு ட்வீட்டில், ” பொதுநலம் பேணி பொற்கால ஆட்சி தந்த பெருந்தலைவர் சமாதி அவர் நினைவு நாளன்று கூட கவலைக்கிடமாக இருந்தது மனதை வருத்தியது. ஊடகம் மூலம் காமராசர் சமாதியை பராமரிக்க முதலமைச்சரிடம்அனுமதி வேண்டி இருக்கிறோம்” என்றார்.


மேலும், பாஜக சார்பில் உயிர் துடிப்பாக அவர் வாழ்ந்த நாட்களை காட்சிப்படுத்தவும் மண்ணின் மகனுக்கு பொருத்தமான நினைவுச்சின்னத்தை மீள்உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்! துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் காமராஜரின் இலட்சியத்திலிருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டது” என தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp ask cm permission to built memorial for kamarajar